2010-12-30 13:23:23

டிசம்பர் 31 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒரு புதிய ஆண்டு 2011 நமக்காகப் பிரசவிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இறுதி நாள். 2010 மறைந்து கொண்டிருக்கிறது. கடந்து சென்ற நாட்கள் கடந்தவைதான். அவ்வாண்டில் நம் வாழ்க்கையில் வந்த கசப்பான அனுபவங்களும் செய்த தவறுகளும் கடந்தவைதான். ஒருவர் உண்மையிலேயே பயனற்ற பழைய அனுபவங்களிலிருந்து கடந்து வர விரும்பினால் அல்லவைகளை மறக்கவும் நல்லவைகளை வளர்க்கவும் உறுதி எடுக்க வேண்டும். ஓ.கே. என் வாழ்வில் இது, இது நடந்து விட்டது. இதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொடருவதில் பலனில்லை. எனவே அவற்றை மறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லி கடவுள் அருளில் நம்பிக்கை வைத்து கசப்புக்களை மறக்க முயற்சிக்க வேண்டும். புனித பவுல் சொல்வது போல கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, (பிலி.3,13,14) புது வாழ்வில் (உரோம.6,4) அடி எடுத்து வைக்க வேண்டும். புதிய ஆண்டில் ஒவ்வொரு நாளும் மாபெரும் நாளாக அமைய ஆழமான ஆன்மீக வாழ்வைக் வளர்த்துக் கொள்வது நல்லது.

மார்க் டுவைன் என்பவர் சொன்னார் – நான் பல பெரிய கஷ்டங்கள் பற்றி அறிவேன். ஆனால் அவற்றில் பல ஒருபோதும் நடந்திராதவை என்று.








All the contents on this site are copyrighted ©.