2010-12-30 14:50:36

கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் அரசின் தலையீடு அதிகம் இருக்கும் - போபால் பேராயர் லியோ கொர்னேலியோ


டிச.30, 2010. இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தை அரசாணையாக மாற்றும் போது, கிறிஸ்துவர்களின் கவலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று போபால் பேராயர் கூறினார்.

மத்தியப்பிரதேச அரசு ஜனவரியில் வெளியிட உள்ள கல்வித் திட்டங்களால் கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் அரசின் தலையீடு அதிகம் இருக்கும் என்று தாங்கள் அஞ்சுவதாக போபால் பேராயர் லியோ கொர்னேலியோ கூறினார்.

பேராயரின் தலைமையில் கிறிஸ்தவர்களின் குழு ஒன்று மத்தியப்பிரதேசக் கல்வி அமைச்சரான Archana Chitnisஐ இப்புதனன்று சந்தித்து, தங்கள் கவலைகளை வெளியிட்டனர்.

கிறிஸ்தவர்களின் நியாயமான கவலைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் வாக்கு கொடுத்ததாக பேராயர் நிருபர்களிடம் கூறினார்.

போபால் உயர் மறைமாவட்டத்தில் 1000க்கும் அதிகமான பள்ளிகள் கிறிஸ்தவர்களால் நடத்தப்படுகிறதென்று சுட்டிக் காட்டிய பேராயர் கொர்னேலியோ, அரசின் இந்தப் புதியத் திட்ட வரைவுகளில் கிறிஸ்தவர்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.