2010-12-29 14:58:13

பங்களாதேஷின் நான்கு கோடி அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமைப் பெற்றுத்தர இயேசுசபையினர் முயற்சி


டிச.29, 2010. பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்திருக்கும் நான்கு கோடி மக்களுக்கு இந்தியக் குடியுரிமைப் பெற்றுத்தர வட வங்காளத்தில் இயேசுசபை நடத்தி வரும் சமூகச் செயல்பாட்டுக் குழுவொன்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

'விழிப்புணர்வு பெறுதல்' என்ற பொருள்படும் Udayani என்ற அமைப்பின் தலைமையில் Matua என்ற தாழ்த்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இச்செவ்வாயன்று கொல்கத்தாவில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

Matua இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் 13 மாநிலங்களில் வாழ்கின்றனர் என்றும் இவர்கள் இந்தியக் குடிமக்களுக்குரிய எந்த ஒரு உரிமையும் இன்றி, அகதிகளாக வாழ்கின்றனர் என்றும் Udayani அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை இருதய ஜோதி கூறினார்.
வங்காளம் பிளவுபடாத நிலையில் இருந்த போது, 1880ம் ஆண்டு குரு Chand Thakur என்பவரால் Matua இனத்தவரின் சமூகம் அமைக்கப்பட்டதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.