2010-12-28 15:40:43

ஆப்ரிக்காவில் மொரோக்கோவும் தென்னாப்ரிக்காவும் ஆயுதங்களை அதிகமாக வாங்கியுள்ள நாடுகள்


டிச.28,2010. மொரோக்கோவும் தென்னாப்ரிக்காவும் கடந்த ஐந்தாண்டுகளில் இராணுவத்திற்கானச் செலவை கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகவும் ஆப்ரிக்கக் கண்டத்தில் இவ்விரண்டு நாடுகளே ஆயுதங்களை அதிகமாக வாங்கியிருப்பதாகவும் Forecast International (FI) என்ற சர்வதேச நிறுவனம் அறிவித்தது.

2005க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் இவ்விரண்டு ஆப்ரிக்க நாடுகளும் இராணுவத்திற்கானத் தங்களது செலவை ஆண்டுக்கு 13 விழுக்காடு வீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்ததாக Forecast International அறிவித்தது.

ஆப்ரிக்க நாடுகள் தங்களது இராணுவத்திற்கானச் செலவை ஒவ்வோர் ஆண்டும் மூன்று விழுக்காடு வரை 2014ம் ஆண்டு வரை அதிகரித்துக் கொண்டிருக்கும் என்றும் இவ்வாய்வி்ல் கண்டறிந்ததாக அந்நிறுவனம் மேலும் அறிவித்தது

ஆப்ரிக்காவில் இவ்விரு நாடுகளையடுத்து அல்ஜீரியா, நைஜீரியா, சூடான், லிபியா, அங்கோலா ஆகிய நாடுகளும் இராணுவத்திற்கென அதிகமாகச் செலவு செய்கி்ன்றன என்றும் இவ்வாய்வு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.