2010-12-27 15:04:46

வட வங்காளத்தில் இஸ்லாமியர் ஒருவர் முன்னின்று நடத்திய கிறிஸ்மஸ் ஊர்வலம்


டிச.27, 2010. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பழங்குடியினர் அதிகம் உள்ள ஒரு பங்கு தளத்தில் கடந்த 28 ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இஸ்லாமியர் ஒருவர் கிறிஸ்மஸ் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்.

வட வங்காளத்தில் உள்ள அம்பிகா கல்னா என்ற ஊரில் நடைபெறும் கிறிஸ்மஸ் ஊர்வலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இறைச்சி வியாபாரம் செய்யும் 48 வயதான Lalu Mallick என்ற இஸ்லாமியர் அலங்கரிக்கப்பட்ட ஒரு வண்டியைத் தாயாரித்து, ஊர்வலத்தின் முன் நடத்திச்செல்வது வழக்கம்.

பல ஆண்டுகளுக்கு முன் அவ்வூரில் இருந்த இஸ்லாமிய இளையோர் இந்த ஊர்வலத்தை நிறுத்த முயன்றபோது, தான் அதைத் தடுத்து, ஊர்வலத்தைத் தானே முன்னின்று நடத்த ஆரம்பித்ததாகக் கூறிய Mallick, கடந்த 28 ஆண்டுகளாக இப்பணியைச் செய்வது தனக்குப் பெரிதும் மனநிம்மதி தருகிறதென்று UCAN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

Mallick தன் பங்கில் உள்ள பல கத்தோலிக்க இளையோரை விட அதிக ஆர்வமாய் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார் என்று பங்கு தந்தை Sebastian Xalxo கூறினார்.








All the contents on this site are copyrighted ©.