2010-12-27 14:44:03

டிசம்பர் 28 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1065 - இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் திறந்துவைக்கப்பட்டது.

1612 - கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்

1836 - மெக்சிகோவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.

1885 - பிரித்தானிய இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.

1895 - பிரான்சின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.

1908 - இத்தாலியின் சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 75,000 பேர் இறந்தனர்.

1930 - மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.

1981 - அமெரிக்காவின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எலிசபெத் கார் வெர்ஜீனியாவில் பிறந்தது.

2007 - நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.








All the contents on this site are copyrighted ©.