2010-12-27 15:03:03

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக உரோம் நகரின் ஏழைகளோடு இணைந்து உணவருந்தினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.


டிச 27, 2010. கிறிஸ்மஸ் திருவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இஞ்ஞாயிறு நண்பகல் உணவை உரோம் நகரின் ஏழைகளோடு இணைந்து அருந்தினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

உரோம் நகரின் பல்வேறு உதவி மையங்களில் இருந்து தினசரி உணவைப் பெற்று வரும் 251 ஏழைகள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் கன்னியர்கள், துறவிகள் என ஏறத்தாழ 517 பேருடன் இஞ்ஞாயிறு மதிய உணவை வத்திக்கானின் 6ம் சின்னப்பர் மண்டபத்தில் அருந்திய திருத்தந்தை, எழைகளுக்காகவே வாழ்ந்து மரித்த அன்னை தெரேசாவின் மாண்புகளை எடுத்தியம்பினார். கிறிஸ்துவின் அன்பிற்காக, கிறிஸ்துவின் அன்பில் ஓர் எளிமையான, மறைவான வாழ்வை மேற்கொண்டதன் மூலமே அன்னை தெரேசா இவ்வளவு புகழ் வாய்ந்தவராக மாறியுள்ளார் என்பதையும் சுட்டிகாட்டினார் பாப்பிறை.

அன்னை தெரேசா பிறந்ததன் 100ம் ஆண்டைத் திருச்சபை சிறப்பித்து வரும் இவ்வேளையில், அன்னை தெரேசா சபையினரால் நடத்தப்படும் இல்லங்களில் உதவி பெறுவோர் மற்றும் பணிபுரிபவரோடு திருத்தந்தை மதிய உணவருந்திய இந்நிகழ்ச்சியில் அச்சபை அதிபர் அருட்சகோதரி பிரேமாவும் கலந்து கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.