2010-12-27 15:04:55

கந்தமால் பகுதி கிறிஸ்தவர்கள் கொண்டாடிய அமைதியான கிறிஸ்மஸ்


டிச.27, 2010. இந்தியாவின் கந்தமால் பகுதி கிறிஸ்தவர்கள் அமைதியாகக் கிறிஸ்மஸ் கொண்டாடினர்.

கிறிஸ்மஸ் நாளன்று இந்து அடிப்படைவாதக் குழுக்களின் போராட்ட ஊர்வலங்கள் நடைபெறும் என்று பயந்திருந்த கந்தமால் பகுதி கிறிஸ்தவர்கள் அப்போராட்ட ஊர்வலங்கள் ஏதுமின்றி, அமைதியான முறையில் கிறிஸ்மஸைக் கொண்டாடினார்கள்.

அப்பகுதியின் முக்கியமான சாலைகளின் மேல் அமைந்திருந்த கோவில்களில் காவல் துறையினரின் பலத்தப் பாதுக்காப்புடன் கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலிகள் நடத்தப்பட்டன.

2008ம் ஆண்டு வன்முறைக்கு உள்ளான கிராமப் பகுதிகளில் பாதுக்காப்பு கருதி, இரவுத் திருப்பலிகள் எதுவும் நடைபெறவில்லை. பல இடங்களில் கோவிலுக்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில் இரவு பத்து மணிக்கு மேல் எதுவும் ஒலிபரப்பக் கூடாதென்று காவல் துறையினர் தடை விதித்திருந்தனர்.








All the contents on this site are copyrighted ©.