2010-12-23 15:36:29

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் கிறிஸ்மஸைக் கொண்டாட பாட்னா உயர்மறைமாநிலப் பேராயர் அழைப்பு


டிச.23, 2010. சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் கிறிஸ்மஸைக் கொண்டாடுவதற்கு இந்தியாவின் பாட்னா உயர்மறைமாநிலப் பேராயர் அழைப்பு விடுத்துள்ளார்.

பாட்னா பேராயர் வில்லியம் டிசூசா அண்மையில் அனுப்பியுள்ள மேய்ப்புப் பணி மடலில் சுற்றுச்சூழலைக் கவனத்தில் கொண்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

பேராயரின் இம்மடல் அனைத்து பங்குகளிலும் அண்மையில் வாசிக்கப்பட்டதென்று UCAN செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

சென்ற ஆண்டு பேராயர் கிறிஸ்மஸையொட்டி அனுப்பிய மேய்ப்புப் பணி மடலில் மின்சாரத்தின் பயன்பாட்டைக் குறைக்கும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

சுற்றுச் சூழல் குறித்து நாம் தகுந்த அக்கறை எடுக்கவில்லையெனில், இந்த பூமி வெகு விரைவில் அழியும் ஆபத்து உள்ளதென்று இவ்வாண்டின் சுற்று மடலில் கூறியுள்ளார்.

பேராயரின் இம்மடல் கிறிஸ்தவர்கள் இன்னும் பல ஆண்டுகள் பின்பற்ற வேண்டிய ஒரு கருத்தைக் கூறியுள்ளது என்று இம்மடல் குறித்து UCAN செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த இயேசு சபை குரு ராபர்ட் அத்திக்கல் கூறினார்.

சுற்றுச் சூழல் பாதுக்கப்பிற்கென 'Taru Mitra' அதாவது மரங்களின் நண்பன் என்ற அமைப்பினை நடத்தி வருபவர் அருள்தந்தை அத்திக்கல் என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.