2010-12-23 15:38:08

ஈராக் கிறிஸ்தவர்களின் சார்பாக பராக் ஒபாமா செயல்பட வேண்டும் - 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பியுள்ள கடிதம்


டிச.23, 2010. இதற்கிடையே, ஈராக்கில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களின் சார்பாக அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா செயல்பட வேண்டுமென்று உலகின் 15 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை ஒபாமாவுக்கு அனுப்பியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய இந்தக் கடிதம் வாஷிங்கடனில் உள்ள வெள்ளை மாளிகையை அடைந்துள்ளதென்றும், நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகரான Tom Donilon வழியாக அது அரசுத் தலைவர் ஒபாமாவைச் சென்றடையும் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஈராக்கிலும், மத்தியக் கிழக்குப் பகுதியிலும் அமைதி நிலவுவதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு தனிப்பட்ட பங்கு வகிக்கவேண்டும் என்பதால், இந்த விண்ணப்பம் ஒபாமா வழியாக அனுப்பப்படுகிறதென்று கூறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்க அரசுத் தலைவர் இவ்விடயத்தில் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சிக்கும் தங்கள் முழு ஒத்துழைப்பும் உண்டென்று உறுதி அளித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.