2010-12-22 15:22:57

இலங்கைத் தமிழர்கள், நாட்டுப் பண்ணைத் தமிழில் தொடர்ந்து பாடுவதற்கு உறுதி வழங்கப்படுமாறு அரசுத் தலைவருக்கு ஆங்லிக்கன் ஆயர் அழைப்பு


டிச.22,2010. இலங்கைத் தமிழர்கள், இலங்கையின் நாட்டுப் பண்ணைத் தங்களது தாய் மொழியிலே தொடர்ந்து பாடுவதற்கு உறுதி வழங்கப்படுமாறு அரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆங்லிக்கன் ஆயர் துலீப் தெ சிக்கேரா.

இலங்கைத் தேசியக் கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது தடை செய்யப்படும் என்று அண்மையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கடும் வாக்கு விவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. எனினும், தமிழ் மொழியிலான நாட்டுப்பண் சிங்கள மொழியின் அச்சு அசலான மொழியாக்கம் மற்றும் சிங்கள மொழியில் பாடப்படும் அதே ராகத்தில் தமிழிலும் பாடப்படுகின்றது. 1948ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த ஒரு பழக்கம் இருந்து வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது.

தமிழ் மொழி பேசும் குடிமக்கள் நாட்டுப் பண்ணைத் தங்களது மொழியில் பாடுவதைத் தடை செய்வதற்கான முயற்சி மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது என்று ஆயர் சிக்கேரா கூறினார்.








All the contents on this site are copyrighted ©.