2010-12-21 15:45:56

திருத்தந்தை பங்குகொள்ளும் கிறிஸ்து பிறப்பு விழா வழிபாட்டு நிகழ்வுகளை தன் இணையதளம் மூலம் நேரடியாகத் தருகிறது வத்திக்கான் வானொலி.


டிச 21, 2010. இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில் திருத்தந்தை பங்குகொள்ளும் வழிபாட்டு நிகழ்வுகளை நேரடியாகவும், உயரிய ஒலி ஒளித் திறனுடனும் நேயர்களுக்குத் தன் இணையதளம் மூலம் வழங்க உள்ளது வத்திக்கான் வானொலி.

உரோம் நேரம் வெள்ளி இரவு 10 மணிக்கு அதாவது இந்திய நேரம் 25ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்தும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலி, 25ந்தேதி நண்பகல் 12 மணிக்கு, அதாவது இந்திய நேரம் மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் திருத்தந்தையின் ஊர்பி எத் ஓர்பி வாழ்த்து செய்தி, மற்றும் ஜனவரி முதல் தேதியின் உலக அமைதி தினத் திருப்பலி ஆகியவை வத்திக்கான் வானொலி இணையதளம் மூலம் ஒலி ஒளி வடிவில் நேரடியாக வழங்கப்படும்.

ஆங்கிலம், இத்தாலியம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், இஸ்பானியம் மற்றும் போர்த்துகீசிய மொழிகளில் நேரடி வர்ணனைகளும் இடம்பெறும்.

வத்திக்கான் வானொலி இணையதளத்தைத் திறந்த உடன் வரும் முகப்புப் பக்கத்தில் இடது பக்கமாக உள்ள தலைப்புகளில் நான்காவதாகத் தெரியும் Audio Video Player என்பதைச் சொடுக்கினால் நேரடி ஒலிபரப்புத் தரும் பக்கம் தனியாகத் திறக்கும்.








All the contents on this site are copyrighted ©.