2010-12-20 15:04:46

வேளாங்கண்ணிக்கும் நாகைக்கும் இடையே இரயில்பாதை திறப்பு


டிச 20, 2010. நாகைக்கும் வேளாங்கண்ணிக்கும் இடையே அகல இரயில் பாதைக்கென 11 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதிய ஜனதாகட்சியால் நிதி ஒதுக்கப்பட்டு துவக்கப்பட்ட பணிகள் இத்திங்களன்று நிறைவுற்று இரயில்பாதை திறக்கப்பட்டுள்ளது.

மரியன்னை திருத்தலத்திற்கான இந்த இரயில் பாதை திறக்கப்பட்டுள்ளது குறித்து திருத்தல நிர்வாகம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார் அத்திருத்தல அதிபர் குரு ஆரோக்கியசாமி மைக்கேல். அன்னைமரி காட்சியளித்த வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றனர் அதில் ஏறத்தாழ பாதிபேர் பிற மதங்களைச் சார்ந்தவர்கள் என அத்திருத்தல அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இரயில் பாதை இடும் பணிகளுக்கென வேளாங்கண்ணி திருத்தலம் 1கோடி ரூபாயை தன் பங்காக வழங்கியுள்ளது.

இதற்கிடையே, நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடையே திறக்கப்பட்டுள்ள புதிய அகல இரயில்பாதையில் இச்செவ்வாய் முதல் பாசஞ்சர் இரயில்கள் இயக்கப்படும் எனவும், வேளாங்கண்ணியிலிருந்து காலை 10.20 க்கும், மாலை 4 மணிக்கும் நாகை நோக்கியும், நாகையிலிருந்து காலை 9. 37க்கும் 11.25 க்கும் வேளாங்கண்ணி நோக்கியும் இரயில்கள் புறப்படும் எனவும் தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.