2010-12-18 15:09:24

கிறிஸ்தவ சபைகளின் ஐக்கியம் மட்டுமே இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்ள உதவும் - கர்தினால் கோச்


டிச.18,2010. கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் திருச்சபைகள் தங்களுக்கு இடையே முழு ஒன்றிப்பை அடைய வேண்டுமெனில் பாப்பிறை அதிகாரம் குறித்த இணக்கமின்மைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று திருப்பீடக் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் புதிய தலைவர் கூறினார்.

கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து இருந்தால் மட்டுமே இன்றைய உலகம் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று கர்தினால் Kurt Koch கூறினார்.

Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் பாதுகாவலராகிய திருத்தூதர் அந்திரேயா விழாவில் கலந்து கொண்டு திரும்பிய கர்தினால் Koch ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்

திருப்பீடக் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு தற்போது சிறப்பிக்கப்பட்டு வருகிறது







All the contents on this site are copyrighted ©.