2010-12-16 15:18:32

இலங்கையின் வடபகுதியில் உணவு பற்றாக்குறை அதிகரிப்பு - World Food Programme


டிச.16, 2010. இலங்கையின் வடபகுதியில் உணவு பற்றாக் குறை அதிகரித்து வருவதாக Fides செய்தி நிறுவனம் தன் கவலையை வெளியிட்டுள்ளது.
உலக உணவு திட்டம் (WFP- World Food Programme) என்ற அமைப்பு அண்மையில் இலங்கையின் வடபகுதியில் உள்ள முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், கிள்ளிநொச்சி, மன்னார் ஆகிய இடங்களில் உள்ள 1755 குடும்பங்களில் உணவு பாதுகாப்பு குறித்த கணக்கெடுப்பினை மேற்கொண்டது. இக்கணக்கெடுப்பின் முடிவுகள் அண்மையில் வெளியாயின.
வட இலங்கையில் உள்ள இப்பகுதிகளில் உணவுக்கென இக்குடும்பங்கள் தங்கள் வருவாயில் 65 விழுக்காடு செலவிட வேண்டியுள்ளதென்று தெரிகிறது.இலங்கையின் உள்நாட்டுப் போரினால் வீடுகளை இழந்த பல இலட்சம் பேரில், 3 இலட்சம் பேர் இப்போரின் முடிவில் இலங்கையின் வடபகுதிகளில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று Fides செய்தி மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.