2010-12-15 15:49:36

ஹெய்ட்டியில் உதவிகள் செய்யப்படாவிட்டால் காலராவினால் 2 இலட்சம் பேர் இறப்பர்


டிச.15,2010. ஹெய்ட்டி நாட்டில் காலரா நோய்ப் பரவுவதை நிறுத்துவதற்கு உதவிகள் செய்யப்படாவிட்டால் இந்நோயால் 2 இலட்சம் பேர் இறப்பர் மற்றும் 4 இலட்சம் பேர் தாக்கப்படுவர் என்று மறைபோதகக் குரு ஒருவர் கூறினார்.

இந்நாட்டில் நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே வருகிறது என்று, கமிலியன் மறைபோதகச் சபையின் ஹெய்ட்டித் தலைவர் அருட்திரு Antonio Menegon எச்சரித்தார்.

அந்நாட்டின் தேர்தல் முடிவுகளையொட்டி வன்முறைகளும் பரவலாக அதிகரித்து இருப்பதாகவும், இதனால் வெளிநாட்டுத் தூதரகங்கள், துறைமுகங்கள், விமானநிலையங்கள், சாலைகள் என அனைத்தும் சரிவர இயங்காமல் இருக்கின்றன எனவும் அக்குரு கூறினார்.

இதனால் தேவையான மருந்துகளும் எண்ணெயும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது எனவும் அவர் கவலை தெரிவித்தார்.

ஹெய்ட்டியில் காலராவினால் இதுவரை 2100 பேர் இறந்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.