ஆப்ரிக்காவில் கொசுவலைகள் பயன்படுத்தப்பட்டதால் 57 கோடியே 80 இலட்சம் பேர் மலேரியாவினின்று
தப்பியுள்ளனர்
டிச.15,2010. ஆப்ரிக்காவில் மலேரியா பரவுவதைத் தடுக்கும் கொசுவலைகள் விநியோகிக்கப்பட்டதன்
பயனாக ஏறக்குறைய 57 கோடியே 80 இலட்சம் பேர் இந்நோயினின்று பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்று
இச்செவ்வாயன்று வெளியான ஐ.நா.அறிக்கை கூறுகிறது.
ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த
பகுதிகளில் மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கிய 57 கோடிக்கு மேற்பட்ட
மக்கள் கொசுவலைகளைப் பயன்படுத்தியதால் இந்நோயினின்று தப்பித்துள்ளனர் என்று அவ்வறிக்கை
கூறுகிறது.
எனினும் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கு இவ்வாண்டில் 600 கோடி டாலர்
தேவைப்படுகின்றது என்று அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
உலகில் மலேரியாவால் ஒவ்வொரு
45 வினாடிகளுக்கு ஒருவர் வீதம் இறக்கின்றனர். இவ்விறப்புக்களில் சுமார் 90 விழுக்காடு
ஆப்ரிக்காவில் இடம் பெறுகின்றது என்று “உலக மலேரியா 2010” என்ற அறிக்கை கூறுகிறது.