2010-12-14 15:08:05

பலுசிஸ்தானில் கொல்லப்படும் ஆசிரியர்கள்


டிச.14,2010. பாகிஸ்தானின் பிரச்சினைக்குரிய மாகாணமான பலுசிஸ்தானில் (Balochistan) தீவிரவாதக் குழுக்கள் ஆசிரியர்களைத் திட்டமிட்டுக் கொலை செய்வதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்ப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குறை கூறியுள்ளது.

2008 ஜனவரி முதல் 2010 அக்டோபர் வரை அந்த மாகாணத்தில் குறைந்தது 22 ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகின்றது.

இந்த வன்செயல்கள் நிறுத்தப்படாவிட்டால், பலுசிஸ்தானின் சிறார்களின் எதிர்காலம் சூனியமாகிவிடுவதுடன் அம்மாகாணத்தில் வளமையும் முன்னேற்றமும் ஒருபொழுதும் ஏற்படாது என்று அந்த அமைப்பின் தெற்கு ஆசிய ஆய்வாளர் Ali Dayan Hasan எச்சரித்தார்.

''அவர்களின் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது'' என்ற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில் பலுசிஸ்தானில் நடந்த அத்தகைய பல தாக்குதல்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான், கனிம வளங்கள் நிறைந்த மாகாணமாக இருக்கின்ற போதிலும், அது பாகிஸ்தானின் மிகவும் வறிய மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாகாணமாக இருக்கின்றது







All the contents on this site are copyrighted ©.