2010-12-14 15:04:35

2011ம் ஆண்டில் திருத்தந்தையின் திருப்பயணங்கள்


டிச.14,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2011ம் ஆண்டில் மேற்கொள்ளவிருப்பதாய்த் திட்டமிடப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் திருப்பயணங்கள் குறித்த விபரங்களும் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

வருகிற ஜூன் 4,5 தேதிகளில் குரோவேஷியாவுக்கும், உலக இளையோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 18 முதல் 21 வரை ஸ்பெயினின் மத்ரித்துக்கும், செப்டம்பர் 22 முதல் 25 வரை ஜெர்மனிக்கும், நவம்பர் 18 முதல் 20 வரை ஆப்ரிக்க நாடான பெனினுக்கும் திருத்தந்தை திருப்பயனங்களை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.