2010-12-14 15:08:50

2010ல் ஓப்பியும் போதைச் செடி உற்பத்தி 22 விழுக்காடு அதிகரிப்பு


டிச.14,2010. ஓப்பியும் பாப்பிப் போதைச் செடிகளின் உற்பத்தி தென் கிழக்கு ஆசியாவில் 2010ம் ஆண்டில், 22 விழுக்காடு அதிகரித்திருப்பதாக இத்திங்களன்று வெளியான ஐ.நா.அறிக்கை ஒன்று கூறியது.

விவசாயிகளின் வறுமையும் சமூகத்தின் உறுதியற்றதன்மையுமே இந்த வேளாண்மைக்கு முக்கிய இரண்டு காரணங்கள் என்று கூறும் “போதைப் பொருள் மற்றும் குற்றங்கள்” குறித்த ஐ.நா. அலுவலகம்(UNODC), உலகப் பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டது.

இதனால் கிடைக்கும் வருவாயும், கடந்த ஆண்டைவிட பத்து கோடி டாலருக்கு மேல் அதிகரித்திருப்பதாகவும் அவ்வறிக்கை கூறியது. தற்போதைய வருவாய் 21 கோடியே 90 இலட்சம் டாலர் எனக் கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.