2010-12-13 14:51:00

டிசம்பர் 14 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1287 - நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே (Zuider Zee) கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1899 - யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசு பொறுப்பெடுத்துக் கொண்டது.

1900 - மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.

1903 - ரைட் சகோதரர்கள் தங்களது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர்.

1911 - ரோல்ட் அமுண்ட்சென் (Roald Amundsen) தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் துருவத்தை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.

1946 - ஐநாவின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவாகியது.

1955 ல் இலங்கை, அல்பேனியா, ஆஸ்ட்ரியா, பல்கேரியா, கம்போடியா, ஃபின்லாந்து, ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, ஜோர்டன். லாவோஸ், லிபியா, நேபாளம், போர்த்துக்கல், ரொமானியா, ஸ்பெயின் ஆகியவையும் 1961ல் டான்சானிய கூட்டுக் குடியரசும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இணைந்தன.

1962 - நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.

2004 - தென் பிரான்சில், வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ Millau என்ற உலகின் மிக உயரமான பாலம் திறக்கப்பட்டது.

டிசம்பர் 14 இந்திய எரிபொருள் சேமிப்பு நாள்








All the contents on this site are copyrighted ©.