2010-12-13 16:03:23

கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் சகிப்பற்றத் தன்மை வளர்ந்து வருகிறது - திருப்பீடப் பேச்சாளர்


டிச.13, 2010. கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் சகிப்பற்றத் தன்மை மற்றும் பாகுபாடுகள் காட்டும் நிலை ஆகியவை வளர்ந்து வருகிறதென்று திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் இயேசு சபை குரு பெதெரிகோ லொம்பார்தி கூறினார்.

'Octava Dies' என்ற வத்திக்கான் தொலைக்காட்சி வார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருள்தந்தை லொம்பார்தி, கடந்த ஐந்து ஆண்டுகளாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்து அண்மையில் வெளியாகியுள்ள ஒரு அறிக்கையைச் சுட்டிக்காட்டி இவ்வாறு பேசினார்.

கிறிஸ்தவர்களின் அடையாளங்கள், கோவில்கள், தனிநபர்கள் என்று பலவகையிலும் நிகழ்ந்துள்ள வன்முறைகள் இந்த அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்று கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.

கிறிஸ்தவர்களையும், கிறிஸ்துவத்தையும் பாதுக்காப்பவர்கள் மட்டுமின்றி, உலகில் சகிப்புத் தன்மையையும் மதச் சுதந்திரத்தையும் பாதுக்காக்க விரும்பும் அனைவரும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவைகளைச் சிந்திப்பது பயனளிக்கும் என்று திருப்பீடப் பேச்சாளர் தன் உரையாடலில் வலியுறுத்தினார்







All the contents on this site are copyrighted ©.