2010-12-11 14:43:56

ஹெய்ட்டி நாட்டில் பதட்டம்


டிச.11,2010. ஹெய்ட்டி நாட்டில் கடந்த நவம்பர் 28ம் தேதி நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகளையொட்டி நாட்டின் நிலைமை நிச்சயமற்றும் பதட்டம் நிறைந்தும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து நாட்டின் பல இடங்களிலும் எதிர்ப்புப் பேரணிகள் இடம் பெற்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இரண்டாவது சுற்று அரசுத்தலைவர் தேர்தல் வருகிற ஜனவரி 16ம் தேதி நடைபெறும்.

மேலும், ஹெய்ட்டி மக்கள் அமைதி காக்கும்படி ஐ.நா.பாதுகாப்பு அவையும் வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகின் மேற்கிலுள்ள மிக ஏழை நாடாகிய ஹெய்ட்டி, கடந்த ஜனவரியில் கடும் நிலநடுக்கத்தாலும் கடந்த அக்டோபரிலும் காலாராத் தொற்று நோயாலும் கடுமையாயப் பாதிக்கப்பட்டது.

இந்நிலநடுக்கத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். சுமார் 13 இலட்சம் பேர் புலம் பெயர்ந்தனர். காலராவினால் சுமார் 2,120 பேர் இறந்தனர். 44,150க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றனர்.







All the contents on this site are copyrighted ©.