2010-12-11 14:37:59

பெண் குடியேற்றதாரருக்கு அதிகப் பாதுகாப்பு வழங்கப்படத் திருச்சபை கோரிக்கை


டிச.11,2010. வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பெண்களும் சிறுமிகளும் முக்கிய அங்கம் வகிப்பதால் வறுமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு ஆவன செய்யுமாறு சர்வதேச காரித்தாஸ் பொதுச் செயலர் Leslie-Anne Knight கேட்டுக் கொண்டார்.

ஆப்ரிக்காவின் செனெகல் நாட்டில் பெண் குடியேற்றதாரர் குறித்து நடைபெற்ற பன்னாட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஆன், பெண்களின் மேம்பாட்டுக்காக அழைப்பு விடுத்தார்.

கடந்த வாரத்தில் நடந்த இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து குடியேற்றதாரர் விவகாரம் குறித்த நூற்றுக்கும் அதிகமான வல்லுனர்கள் கலந்து கொண்டனர். திருப்பீடக் குடியேற்றதாரர் அவை, துறவு சபைகள் அதிபர்களின் சர்வதேச அமைப்பு, குடியேற்றதாரர்க்கானச் சர்வதேச நிறுவனம், உலக தொழில் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் பங்கெடுத்தனர்.

மக்களின் குடியேற்றமும் அதனால் அம்மக்களின் தாய்நாடுகள் அவர்களால் அடையும் பலன்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் ஊற்றாக அவர்கள் இருப்பதை உணர முடியும் என்று ஆப்ரிக்கக் காரித்தாஸ் தலைவர் பேராயர் சிப்ரியான் லூவான்கா கூறினார்.







All the contents on this site are copyrighted ©.