2010-12-10 15:27:15

புனிதர் மற்றும் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கான 12க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன


டிச.10,2010: புனிதர் மற்றும் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கான 12க்கும் மேற்பட்டவர்களின் பெயர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்குப் பொறுப்பானத் திருப்பீடப் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தை 16ம் பெனடிக்டிடம் சமர்ப்பித்தார்.
மறைபோதகத் தளங்களுக்கானப் புனித பிரான்சிஸ் சவேரியாரின் பக்த சபையை ஆரம்பித்தவரும் இத்தாலியின் பார்மா பேராயருமான முத்திப்பேறு பெற்ற Guido Maria Conforti யின் பரிந்துரையால் புதுமை நடைபெற்றுள்ளது.
இத்தாலியரான Francesco Paleari, ஸ்பானியரான Anna Maria Janer Anglarill, போர்த்துக்கீசியரான Maria Chiara di Gesù Bambino, பிரேசில் நாட்டவரான Dulce, ஆகிய வணக்கத்துக்குரியவர்களின் பரிந்துரைகளால் புதுமைகள் நடைபெற்றுள்ளன.
ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டு மறைசாட்சிகளின் பெயர்களும், இன்னும் வீரத்துவமான தூய வாழ்வு வாழ்ந்த, இத்தாலியர்கள் Antonio Palladino, Maria Elisa Andreoli, லெபனனின் Béchara, ஸ்பெயினின் Maria Pilar del Sacro Cuore ஆகிய இறையடியார்களின் பெயர்களும் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.திருத்தந்தையின் சம்மதத்தைப் பெற்றுள்ள இவர்களில் ஏறத்தாழ எல்லாரும் துறவற சபைகளைத் தொடங்கியவர்கள்.







All the contents on this site are copyrighted ©.