2010-12-10 15:27:43

தேவநிந்தனை சட்டங்கள் மீது கவனம் செலுத்துவதற்கு மனித உரிமைகள் தினம் நல்ல வாய்ப்பு - பாகிஸ்தான் பாப்பிறை மறைபோதகக் கழகங்களின் இயக்குனர்


டிச.10,2010: இவ்வாண்டு மனித உரிமைகள் தினம், பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டங்களை உள்ளடக்கிய குற்றவியல் பகுதிகள் மீது கவனம் செலுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக அமைகின்றது என்று பாகிஸ்தான் பாப்பிறை மறைபோதகக் கழகங்களின் இயக்குனர் அருட்திரு மாரியோ ரொட்ரிக்கெஸ் தெரிவித்தார்.
டிசம்பர் 10, இவ்வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு Fides செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அருட்திரு ரொட்ரிக்கெஸ், பாகிஸ்தான் அரசால் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தேவநிந்தனைச் சட்டம், மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்றது என்று குறை கூறினார்.
அநீதிகளையும் பாகுபாடுகளையும் அடக்குமுறைகளையும் அனுமதிக்கும் இந்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டியதாகும் என்றும் அக்குரு தெரிவித்தார்தேவநிந்தனைச் சட்டம், பாகிஸ்தான் அரசு கையெழுத்திட்டுள்ள அனைத்துல மனித உரிமைகள் ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரண்பாடானதாக இருக்கின்றது என்றும் அருட்திரு ரொட்ரிக்கெஸ் குற்றம் சாட்டினார்.







All the contents on this site are copyrighted ©.