2010-12-10 15:43:22

டிசம்பர் 11. நாளும் ஒரு நல்லெண்ணம்


பொன் பொருள் புகழ் தேடும் உலகில் மனிதனைத் தேடியவர் இயேசு. எனவே ஒவ்வொரு மனிதனும் மனிதப் பண்புகளுக்கு மதிப்புக் கொடுத்து வாழ்வதிலேயே, நாம் சிறப்பிக்கப்போகும் கிறிஸ்மஸ் விழாவின் அர்த்தம் அடங்கியுள்ளது. கிறிஸ்து பிறப்பு என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது அவர் பிறந்த எளிமைக்கோலம்தான். மாட மாளிகை எல்லாம் அவர் வரவுக்காக காத்திருக்க அவரோ எளிய குடிலில் பிறந்தார். இடையரும் ஞானியருமே அவர் பிறப்பின் செய்தியைப் பெற்றனர், அதிகாரத்தில் இருப்போர் அல்ல. ஆட்சியிலிருந்தோர் அவரைக்கண்டு அஞ்சினர். அவரை ஒழிக்கவே முயன்றனர். அவர்களால் இறைமகனை ஏற்க முடியவில்லை. ஏனெனில் அவர்களின் உள்ளங்கள் வேறு தேவைகளால் நிறைந்திருந்தது. கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட தாயாரித்து வரும் நம் உள்ளங்கள் எதை நோக்கி ஏங்கிக்கொண்டிருக்கின்றன.?

அன்று மண்ணில் பிறந்தவர் இன்று மனங்களில் பிறக்க வேண்டியுள்ளது.

மனிதமும் மனித நேயமும் மீண்டும் விதைக்கப்படவேண்டியுள்ளது.

இருளகற்றும் ஒரு விடிவெள்ளி இன்றும் தேவைப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.