2010-12-09 12:54:41

டிசம்பர் 10 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1684 - ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ராயல் கழகத்தில் வாசிக்கப்பட்டது.

1807 - சென்னையில் நிலநடுக்கம் எற்பட்டது.

1868 - உலகின் முதலாவது சாலை நிறுத்த சமிக்கை விளக்குகள் இலண்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே நிறுவப்பட்டது.

1901 - முதலாவது நொபெல் பரிசுகள் வழங்கப்பட்டன.

1902 - தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1948 - மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொது அவை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.

1981 - தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது.

1989 - மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது








All the contents on this site are copyrighted ©.