2010-12-09 12:52:37

டிசம்பர் 10 நாளும் ஒரு நல்லெண்ணம்


அமைதி. இன, மொழி, மத வேறுபாடின்றி எல்லாராலும் விரும்பப்படும் ஒரு சொல். மனஅமைதி வேண்டுமா? இதோ பெரியோரின் அறிவுரைகளில் சில:

நல்லோரைக் காண்பதும் நன்று, நல்லோர் சொற் கேட்பதும் நன்று, நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று, நல்லோருடன் இணங்கி இருப்பதும் நன்று என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். எனவே தீயவர்களோடு உறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சண்டை, ச்ச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். சளசளவெனப் பேசுவதைத் தவிருங்கள். ஏனெனில் அது உங்கள் சக்தியை வீணாக்கும். வீணான விவாதத்தில் உங்கள் நேரத்தைப் பாழ்படுத்தாதீர்கள். வீண் சர்ச்சை பகையை வளர்க்கும். ஆசைப் படப்பட ஆய்வறும் துன்பம். ஆசை விட விட ஆனந்தமாமே! என்பதால் உங்கள் தேவைகளைப் பெரிதும் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு போதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்றெல்லாம் ஒரு போதும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் நேர்மையுடனும், மனசாட்சியுடனும் செயலாற்றுவீர்களேயானால் எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்களே உங்களுக்கு உற்ற நண்பன்.

டிசம்பர் 10, 1948ம் ஆண்டில் ஐநா பொது அவை மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை அறிவித்தது. டிசம்பர் 10, 1901ம் ஆண்டு நொபெல் விருதுகள் முதன் முதலில் அறிவிக்கப்பட்டன. எனவே டிசம்பர் 10ம் நாள் நார்வே நாட்டு ஒஸ்லோவில் அமைதிக்கான நொபெல் விருதும் சுவீடன் நாட்டு ஸ்டாக்ஹோம் நகரத்தில் இயற்பியல், வேதியல், மருத்துவயியல், இலக்கியம், பொருளியல் ஆகியவற்றுக்கான நொபெல் விருதுகளும் வழங்கப்படுகிறன. இவ்விருதுகள் 1895ல் சுவீடன் நாட்டு ஆல்ஃபிரட் நொபெல் என்பவரின் விருப்பத்தால் தொடங்கப்பட்டன. இவர் 1896ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இத்தாலியின் சன்ரேமோவில் இறந்தார். எனவே இவர் இறந்த நாளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. மார்ச் 2005 வரை 770 நொபெல் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டின் நொபெல் அமைதி விருது சீனாவில் அடிப்படை மனித உரிமைகளுக்காக நீண்ட காலமாக அகிம்சா வழியில் போராடும் Liu Xiaobo வுக்கு வழங்கப்படுகிறது. நொபெல் விருது என்பது ஒப்பற்ற ஆய்வை மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்டும் விருது ஆகும். அமைதிக்கான நொபெல் விருது மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு விருதுகூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த விருது அறிவிக்கபடுகிறது. நொபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.

அமைதி. எல்லாராலும் விரும்பப்படுவது








All the contents on this site are copyrighted ©.