2010-12-09 15:19:39

ஒரிஸ்ஸா அரசின் மீது தலத்திருச்சபை அதிகாரிகள், சமூக ஆர்வலர்களின் கண்டனம்


டிச.09, 2010. ஒரிஸ்ஸாவில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட அருள் சகோதரியின் வழக்கை அம்மாநில அரசு சரியான முறையில் நடத்தாமல் முடித்திருப்பதற்கு ஒரிஸ்ஸா தலத்திருச்சபை அதிகாரிகளும், அம்மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதாட வேண்டிய வழக்கறிஞர்களுக்கு அரசு இதுவரை பணம் அளிக்காததால், அவர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக இச்செவ்வாயன்று அறிவித்தனர். அதற்குப் பின்னரும் அரசு எந்த முயற்சியும் எடுக்காதது இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டுள்ளவருக்குச் செய்யும் பெரும் அநீதி என்று இவ்வழக்கறிஞர்கள் இப்புதனன்று கூறியுள்ளனர்.
ஊடகங்களில் இவ்வளவு பரவலாகப் பேசப்பட்ட அருள் சகோதரியின் வழக்கிலேயே அரசு இத்தனை அக்கறையின்றி செயல்படுவது கிறிஸ்தவர்கள் பேரில் அவ்வரசு காட்டும் அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதென்று புபனேஸ்வர் பேராயர் இரபேல் சீனத் கூறினார்.2008ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறை குறித்த வழக்குகளில் ஒரிஸ்ஸா அரசு சிறிதும் அக்கறையின்றி நடந்து கொள்வது வேதனைத் தருகிறதென்று சமூக ஆர்வலர் Lalita Missal கூறினார்.







All the contents on this site are copyrighted ©.