அமெரிக்க ஐக்கிய நாட்டில் அன்னை மரியா தோன்றிய காட்சிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டிச.09, 2010. அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாதுகாவலராகப் போற்றப்படும் அமல அன்னையின் திருவிழாவையொட்டி,
அந்நாட்டின் Wisconsin பகுதியில் அன்னை மரியா தோன்றிய காட்சிகளை அம்மறை மாவட்டம் முதன்
முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்ப்தனன்று கொண்டாடப்பட்ட அமல அன்னை மரியாவின்
திருநாளின் போது Wisconsin பகுதியின் Champion எனும் இடத்தில் உள்ள திருத்தலத்தில் Wisconsin
மறைமாவட்ட ஆயர் David Ricken திருப்பலி நிறைவேற்றி, இந்த அங்கீகாரத்தை அறிவித்தார். 1859ம்
ஆண்டு Champion எனும் இடத்தில் அன்னை மரியா Adele Brise என்ற பெண்ணுக்கு மூன்று முறை
தோன்றி, "நானே விண்ணக அரசியான மரியா. பாவிகளின் மனந்திரும்புதலுக்காக நான் வேண்டி வருகிறேன்.
நீயும் இதே கருத்துக்காக வேண்டுவது என் விருப்பம்." என்று அன்னை மரியா சொன்னதாக வரலாற்றுக்
குறிப்புகள் உள்ளன. இந்தக் காட்சிகளைத் தொடர்ந்து, Adele Briseன் தந்தை அவ்விடத்தில்
ஒரு சிறு கோவிலைக் கட்டினார் என்றும், தன் வாழ்நாள் முடியும் வரை, இக்கோவிலில் தினமும்
Adele Brise வேண்டி வந்தார் என்றும் இவ்வரலாறு கூறுகிறது. இந்தக் காட்சிகள் குறித்து
Wisconsin மறைமாவட்டம் தன் ஆய்வுகளை 2009ம் ஆண்டு ஆரம்பித்தது. ஏறத்தாழ இரு ஆண்டுகள்
நடந்த இந்த ஆய்வின் முடிவில், இந்தக் காட்சிகள் திருச்சபையின் ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டதென்று
அறியப்பட்டதால், இக்காட்சிகள் இயற்கையைக் கடந்த அம்சங்கள் பெற்றவை என்று ஆயர் Ricken
இப்புதனன்று அறிவித்தார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அன்னை மரியா காட்சி கொடுத்ததாக
கூறப்படும் Champion திருத்தலம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் அதிகாரப்பூர்வமான முதல் திருத்தலமாகிறது.