2010-12-06 15:48:25

ஹங்கேரியின் பிரதமர் திருத்தந்தையுடன் சந்திப்பு


டிச.06, 2010. இத்திங்கள் காலை ஹங்கேரியின் பிரதமர் Victor Orban திருப்பீடத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone, நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் Dominique Mamberti ஆகியோரைச் சந்தித்து, பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

திருப்பீட அதிகாரிகளுக்கும் ஹங்கேரி பிரதமருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, ஹங்கேரியின் இன்றைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஹங்கேரியின் தேசிய வாழ்வில் கிறிஸ்தவ பாரம்பரியங்களின் முக்கியத்துவம், அதன் புதுப்பித்தலில் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கு ஆகியவைகளும் எடுத்துரைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஐக்கியத்தின் அடுத்தச் சுற்றுத் தலைவராக ஹங்கேரி நாடு பதவியேற்க உள்ளதும், ஐரோப்பியக் கண்டத்தின் முன்னேற்றத்தில் ஹங்கேரி மற்றும் வத்திக்கான் ஈடுபாடு, ஒத்துழைப்பு ஆகியவைகளும் இருநாடுகளின் முக்கியத் தலைவர்களிடையேயான இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.