2010-12-06 15:45:46

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை ஜெப உரை


டிச.06, 2010. திரு விவிலியத்தின் வழியாக உலகமெனும் வனாந்தரத்தில் மீண்டும் எதிரொலிக்கும் இறைவனின் குரலுக்குச் செவிமடுப்பதன் மூலம் இறைமகனின் பிறப்பைக் கொண்டாட நம்மைத் தயாரிப்போம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உரோம் நகரின் புனித இராயப்பர் பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை ஜெப உரையை வழங்கிய திருத்தந்தை, புனித திருமுழுக்கு அருளப்பர் குறித்த தன் சிந்தனைகளை வழங்கியதுடன், அவர் ஒரு விண்மீனாக பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் மத்தியில் சூரியனாம் கிறிஸ்து உதிப்பதற்கு முன் ஒளி வீசுகிறார் என்றார்.

விசுவாசம் என்பது தெய்வீக வார்த்தையின் மூலமாகவே பலப்படுத்தப்பட்டு ஒளியேற்றப்படுகின்றது எனவும் கூறினார் திருத்தந்தை.

இறைவார்த்தைக்குச் செவிமடுத்து, அந்த வார்த்தைவழி தன் முழு வாழ்வையும் செதுக்கிய அன்னைமரி குறித்து நாம் ஆழமாக தியானித்து, அவ்விசுவாச மறையுண்மையில் நுழைந்து, நம் வாழ்வை இறைவனின் உறைவிடங்களாக மாற்றுவோம் என்ற அழைப்பையும் முன் வைத்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.