2010-12-04 15:30:45

பெண்களுக்கான ஐ.நா. அமைப்பு : “பாதுகாப்பான நகரங்கள்” திட்டம்


டிச.04, 2010. பெருநகரங்களில் ஏழ்மை மற்றும் ஓரங்கட்டப்பட்ட நிலையில் வாழும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் “பாதுகாப்பான நகரங்கள்” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது UNIFEM என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான ஐ.நா. நிதி அமைப்பு.

பெண்கள் நூற்றாண்டுகளாக உரிமை மீறல்களை எதிர்நோக்கி வரும்வேளை, இந்தியாவின் புதுடெல்லி, எகிப்தின் கெய்ரோ, ஈக்குவதோரின் குய்ட்டோ, ருவாண்டாவின் கிகாலி, பாப்புவா நியு கினியின் போர்ட்மோர்ஸ்பி ஆகிய ஐவந்து நகரங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது யூனிஃப்பெம்.

இந்த ஐந்து பெரு நகரங்களில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்திருப்பதே இவற்றைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான நோக்கம் என்று சொல்லப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, புதுடெல்லியில் 14 இலட்சத்திலிருந்து ஒரு கோடியே தொன்னூறு இலட்சமாகவும் கெய்ரோவில் 24 இலட்சத்திலிருந்து ஒரு கோடியே எழுபது இலட்சமாகவும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

ஐ.நா.வின் இத்திட்டம் ஏற்கனவே பல இலத்தீன் அமெரிக்க நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.