2010-12-04 15:29:47

பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ஐ.நா.அதிகாரி இரண்டாவது முறையாக பயணம்


டிச.04, 2010. நான்கு மாதங்களுக்கு முன் வரலாற்றில் இல்லாத அளவு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ஐ.நா. அதிகாரி பாகிஸ்தானுக்கு இரண்டாவது முறையாக மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.

வெள்ள நிவாரணப் பணிகள் முற்றிலும் நிறைவேற சில ஆண்டுகள் ஆகலாம் என்றும், அதுவரை இம்மக்களின் வாழ்வுக்குத் தேவையான உதவிகள் செய்வது ஐ.நா.வின் கடமை என்றும் மனிதாபிமான செயல்பாடுகளுக்கான ஐ.நா. அதிகாரி Valerie Amos கூறினார்.

இச்சனிக்கிழமை நிறைவடைந்த இம்மூன்று நாள் பயணத்தில் ஐ.நா. அதிகாரி Amos வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிந்து, கைபர் பகுதிகளைப் பார்வையிட்டார் என்றும், பாகிஸ்தான் பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பிற அரசு அதிகாரிகளைச் சந்தித்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

பாகிஸ்தான் வெள்ளம் வரலாறு காணாத அளவு இருந்ததால், ஐ.நா.நிறுவனம் உலக நாடுகளிடமிருந்து கேட்டுக் கொண்ட 20 கோடி டாலர்கள் அதிகப்படியானத் தொகையில் பாதி அளவு இதுவரை கிடைத்துள்ளதென்றும், இத்தொகயைக் கொண்டு இம்மக்களின் குடிநீர், உணவு, அவசர கால குடியிருப்புகள் ஆகியவைகளைக் கொடுக்க முடிந்ததென்றும் ஐ.நா.அதிகாரி Amos தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.