2010-12-03 15:37:04

சர்வதேச இறையியலாளர் அமைப்பின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை சந்திப்பு


டிச.03, 2010. கிறிஸ்து அனைத்து மக்களுக்காகவும் தன் உயிரைத் தந்தார் என்பதைப் பலர் அறியாதிருப்பினும், இறையன்பைப் பெற்றுள்ள விசுவாசிகள் எவ்வாறு அம்மக்களை அன்பு கூறாமல் இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் பணிகளின் 85வது ஆண்டை சிறப்பிக்கும் சர்வதேச இறையியலாளர் அமைப்பின் அங்கத்தினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த பாப்பிறை, இறைவன் தன் அன்பை வெளிப்படுத்தியதிலிருந்து பிறப்பதே கிறிஸ்தவர்களின் சமூக அர்ப்பணம் என்றார்.நமக்கு வெளிப்படுத்தப்பட்ட இறைவனைக் குறித்த ஆழ்நிலை தியானங்களும், அயலாருக்கான அன்பும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்ற அவர், உண்மையின்றி நீதியில்லை என்றும், உலகாயுதப் போக்குகளால் குறுகிப் போன ஒரு பூமியில் நீதியை முழுமையாக வளர்க்க முடியாது என்றும் உரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.