2010-12-03 15:38:07

இலங்கை மீனவர்கள் கர்தினால் மால்கம் ரஞ்சித்துடன் சந்திப்பு


டிச.03, 2010. இலங்கை அரசு மேற்கொள்ளவிருக்கும் ஒரு சுற்றுலா திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் மீனவர்கள் கர்தினால் மால்கம் ரஞ்சித்தை இப்புதனன்று சந்தித்தனர்.
இலங்கையில் Negombo கடல் பகுதியில் கடலில் வந்திறங்கும் விமானங்கள் என்ற புதிய திட்டத்தை இலங்கை அரசு மேற்கொள்ளவிருக்கிறது.
இந்தத் திட்டத்தால், மீனவர்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என்றும், அந்தக் கடல் பகுதியின் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெருமளவில் பாதிப்புகள் ஏற்படும் என்றும் மீனவர்கள் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் குருக்கள் தங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறார்கள் என்றும் இலங்கையின் கத்தோலிக்கர்களில் 99 விழுக்காடு மீனவர்களாய் இருப்பதால், கர்தினால் அவர்களின் தலையீடு இறுதி வரை தங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புவதாகவும் மீனவர்களின் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் Milina Kumari கூறினார்.மீனவர்களின் இந்தப் போராட்டத்தால் அரசு தன் திட்டங்களில் சிறிது பின் வாங்கியிருந்தாலும், இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழலில் எதுவும் நடக்கும் என்று மீனவர்கள் போராட்டத்தை நடத்தி வரும் Herman Kumara கூறினார்.







All the contents on this site are copyrighted ©.