2010-12-02 15:38:21

டிசம்பர் 03 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1552 – இயேசுசபை மறைபோதகர் புனித பிரான்சிஸ் சவேரியார் இறந்தார்
1795 ல் நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த ரோலண்ட் ஹில்லும்
1884 ல் இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்தும் பிறந்தனர்.
1903 - சர் ஹென்றி பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.
1904 - வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1971 – இந்தியா, கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது.
1973 - வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
1984 - போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
1997 - நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்தத் தடை ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டன. அமெரிக்கா, இரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
 டிசம்பர் 3 புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா மற்றும் உலக மாற்றுத் திறனாளிகள் நாள்







All the contents on this site are copyrighted ©.