2010-12-02 15:38:09

டிசம்பர் 03 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒருமுறை மனஅழுத்தத்தால் நிறைந்திருந்த ஒருவர், ஒரு போதகரிடம் சென்று, “இந்த மிலான் நகரின் காற்று முழுவதும் அடர்த்தி நிறைந்ததாய் பதட்டம் நிறைந்ததாய் இருக்கிறது” என்று குறைபட்டுக் கொண்டார். அதற்கு அந்தப் போதகர், “அப்படியிருக்க முடியாது. இந்தக் காற்றின் ஒரு பகுதியை எடுத்துப் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதித்தால் இந்த நகரின் காற்றில் அணுவளவும் அழுத்தத்தைக் கண்டறிய முடியாது. ஆனால் இந்தப் பதட்டம், இந்தக் காற்றைச் சுவாசிக்கும் மக்களின் மனத்தில் இருக்கின்றது” என்றார்.
நமது மனம் அழுத்தமாகவும் இறுக்கமாகவும் பதட்டமாகவும் இருக்கும் போது சில பெரியோர்களின் அமுதவாக்குகளை மீண்டும் மீண்டும் சொல்வது பயன்தரும். எ.கா.
16ம் நூற்றாண்டு தியானயோகி புனிதர் அவிலா தெரஸ் : “உன்னை எதுவும் தொந்தரவு செய்யாதிருக்கட்டும். எதுவும் பயமுறுத்தாதிருக்கட்டும். கடவுளைத் தவிர எல்லாமே கடந்து போகும். கடவுள் ஒருவர் மட்டுமே போதுமானவர்”.இறைவாக்கினர் எசாயா ...... “அமைதியிலும் நம்பிக்கையிலுமே நீங்கள் வலிமை பெறுவீர்கள்” (எசா.30,15)







All the contents on this site are copyrighted ©.