2010-12-02 15:49:27

கம்யூனிச அரசால் பறிக்கப்பட்டிருந்த சொத்துக்களை மீண்டும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கு ஒப்படைக்கும் முயற்சி


டிச.02, 2010. இரஷ்ய அரசுக்கும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்குமிடையே நிலவி வந்துள்ள பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைத்துள்ளன என்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Kirill கூறியுள்ளார்.
கம்யூனிச இரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்குப் பின் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்குச் சொந்தமான பல கோவில்களும் மடங்களும் கம்யூனிச அரசால் பறிக்கப்பட்டிருந்தன. அரசுடமையாக்காப்பட்ட இந்த சொத்துக்களை மீண்டும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கு ஒப்படைக்கும் ஒரு முயற்சியாக, இரஷ்ய அரசுத் தலைவர் Dmitri Medvedev இச்செவ்வாயன்று ஒரு அரசாணையில் கையொப்பமிட்டார்.
இரஷ்ய அரசுக்கும் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே பல ஆண்டுகளாய் நீடித்து வரும் கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படுவதற்கு இது ஒரு நல்ல ஆரம்பம் என்று முதுபெரும் தலைவர் Kirill கூறினார்.பள்ளிகளில் மதக் கல்வி மற்றும் இராணுவத்தில் குருக்களின் பிரசன்னம் என்பவைகளில் உள்ள கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்படுவதற்கு நல்லதொரு சூழல் உருவாகியுள்ளதென்று முதுபெரும் தலைவர் Kirill மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.