2010-12-02 15:49:13

Cancunல் நடைபெற்று வரும் அகில உலக கருத்தரங்கு பற்றி உலகக் காரித்தாஸ் அமைப்பின் எதிர்ப்பார்ப்புகள்


டிச.02, 2010. பருவ நிலை குறித்து ஒவ்வோர் அரசும் தங்கள் கடமைகளை உணர்வதற்கு மெக்சிகோ நாட்டின் Cancun நகரில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் பருவநிலை மாற்றங்கள் குறித்த அகில உலக கருத்தரங்கு உதவும் என்று எதிர்ப்பார்ப்பதாக அகில உலகக் காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.
பருவ நிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களே என்றும், ஒவ்வொரு முறையும் நாடுகள் மேற்கொள்ளும் கருத்தரங்குகள் ஏழைகளின் துயர்களைக் குறைப்பதற்கு அதிகம் செய்யவில்லை என்றும் காரித்தாஸ் அமைப்பு கூறியது.
Cancunல் நடைபெறும் இக்கருத்தரங்கில் மெக்சிகோ காரித்தாஸ் அமைப்பின் 30 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.நாம் அனைவரும் இவ்வுலகின் கண்காணிப்பாளர்களே தவிர உரிமையாளர்கள் அல்ல என்றும், இவ்வுலகைக் கண்காணிப்பது இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் நாம் காட்டும் கடமை என்றும் மெக்சிகோ காரித்தாஸ் அமைப்பின் தலைவரான ஆயர் Gustavo Rodriguez Vega கூறினார்.







All the contents on this site are copyrighted ©.