2010-12-01 15:57:55

தென்கொரியத் தலத் திருச்சபை தூக்கு தண்டனைக்கு எதிராக போராட்டம்


டிச.01, 2010 தென்கொரியத் தலத் திருச்சபை, Amnesty International மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புக்களுடன் இணைந்து தூக்கு தண்டனைக்கு எதிராக ஒரு போராட்டத்தை இச்செவ்வாயன்று தென்கொரியத் தலைநகரான Seoulல் மேற்கொண்டது.
தென்கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக்கான பணிக் குழுவின் தலைவரான ஆயர் Maththias Ri Iong-hoon இப்போராட்டத்தையொட்டி சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார்.
தென் கொரியாவில் தூக்கு தண்டனைகள் 2007ம் ஆண்டு முதல் நிறைவேடப்படவில்லை எனினும், இச்சட்டம் இருக்கும் வரை மனித உயிர்கள் மதிக்கப்படாமல் போகும் ஆபத்து உள்ளதென்றும், இப்போதும் எப்போதும் உயிர் பலிகள் எல்லா வகையிலும் நிறுத்தப்பட வேண்டுமென்றும் ஆயர் Ri எடுத்துரைத்தார்.
திருப்பலியின் முடிவில் குருக்கள், துறவியர், மக்கள் என்று 200க்கும் அதிகமானோர் Seoul சாலைகளில் ஊர்வலம் சென்றனர்.தூக்கு தண்டனை குறித்த சட்டத்தை ஒழிக்கும் படி, தென் கொரிய பாராளுமன்றத்தில் தற்போது மூன்று விண்ணப்பங்கள் உள்ளதென்றும், பாராளு மன்றம் இப்போது கூடி விவாதித்து வருகிறதென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.