2010-12-01 15:37:23

டிசம்பர் 2. – நாளும் ஒரு நல்லெண்ணம்


முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாத மனிதரும் உண்டோ?

தற்போதுள்ள நிலையில் இருந்து இன்னும் மேலே செல்ல ஒவ்வொருவரும் ஆசைப்படுவது இயல்பே.

எந்த ஒரு திட்டமும் முதலில் மனதில் கட்டப்படுகிறது.

என்ன வேண்டும் என்ற எண்ணம் தான் விதை. முதலில் ஆசையாக இருப்பது பின் இலக்காக மாறுகிறது.

நாம் அடைய விரும்பும் எந்த விடயமும் இப்படித்தான் துவங்கும்.

ஒன்றை அடைய வேண்டும் என்ற எண்ணம் தான் எதற்குமே துவக்கம்.

முதலில் மனதில் பிறப்பது பின்பு செயலாய் மாறுகிறது.

நம்மில் பலருக்கு நமக்கு என்ன தேவை என்பதேத் தெரிவதில்லை. அப்படியேத் தெரிந்தாலும் அதிலும் ஒரு குழப்ப நிலை. நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்தால் தொண்ணூறு விழுக்காடு அதனை அடையலாம் என்பர் அனுபவசாலிகள். அதனை அடையும் வழியில் எத்தனையோ பிரச்சனைகள், தடைகள் வந்தாலும், நாம் உறுதியாய், பொறுமையாய் இருந்தால் நமக்குத் தேவையானதை அடைய முடியும்.

அதே வேளை, நமது எல்லா விருப்பங்களும் நியாயமாக இருக்கும் என சொல்ல முடியாது. இலக்கு நியாயமானதாக இருக்கும்போது மட்டுமே இது சாத்தியம்.

சேர வேண்டிய இடத்துக்கு எப்படிப் போக வேண்டும் என்பது குறித்த வழிமுறைகள் சிந்திக்கப்படவேண்டும். அவ்வழிகளும் நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.

விதை ஒன்று மரமாய் வளர்வதற்கு, நல்ல மண்ணும், நீரும் உரமும் மட்டும் போதாது. அந்த மரம் குறித்த பிற்கால கனவுகளும், அக்கறையும் அன்பும் கூட தேவை.








All the contents on this site are copyrighted ©.