2010-12-01 15:58:21

இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் செய்வதற்கு ஐ.நா. நிறுவனம் கோரியுள்ள உதவித் தொகை


டிச.01, 2010 உலகின் பல்வேறு நாடுகளில் 2010ம் ஆண்டு நடைபெற்ற இயற்கைப் பேரழிவுகள், மற்றும் போர்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் செய்வதற்கு ஐ.நா. நிறுவனம் இதுவரைக் கேட்டிராத அளவு உதவித் தொகையை உலக நாடுகளிடம் கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஹெயிட்டி மற்றும் Chad, Congo, Somalia, Zimbabwe போன்ற ஆப்ரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு சீரழிவுகளைக் களைய ஐ.நா. நிறுவனத்திற்கு 7.4 பில்லியன் டாலர்கள், அதாவது 3,330 கோடி ரூபாய் நிதி உதவி தேவைப்படுவதாக அறிவித்துள்ளது.
உலக நாடுகள் ஐ.நா.வின் மனித நல முயற்சிகளுக்கு ஆகும் நிதியைக் குறைத்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் பல இலட்சம் குழந்தைகள் இறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று ஐ.நா.அதிகாரி Elisabeth Byrs ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.மனித குலத்தின் துன்பங்களைத் துடைக்கும் விதம் 1991ம் ஆண்டு ஐ.நா. CAP என்ற அமைப்பின் மூலம் உலக நாடுகளிடம் நிதி உதவிகள் பெற்று வருவதாகவும், 2011ம் ஆண்டுக்கென ஐ.நா. விண்ணப்பித்துள்ள தொகையே இதுவரை மிக அதிகப்படியான தொகை என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.