நவ 29, 2010. பிரசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இடம்பெறும் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குத்
திருத்தந்தையின் அனுதாபத்தை வெளியிடும் இரங்கற்தந்தியை அந்நாட்டு தலத்திருச்சபைக்கு அனுப்பியுள்ளார்
திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
ரியோ டி ஜெனீரோவில் குறிப்பாக
வில்லா குறுசெய்ரோ எனுமிடத்தில் இந்நாட்களில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து திருத்தந்தை
ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், இதில் இறந்தவர்களுக்கான ஜெபத்திற்கு உறுதி கூறுவதோடு பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன்
ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ரியோ டி ஜெனீரோ
சேரிகளில் அண்மையில் போதைப்பொருள் கடத்துவோரின் பின்னணியுடன் இடம்பெற்ற வன்முறைகளில்
குறைந்த பட்சம் 46 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.