2010-11-29 14:54:30

ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் ஐந்து கிறிஸ்தவர்கள் நிலக்கண்ணி வெடி விபத்தில் கொல்லப்பட்டனர்


நவ.29, 2010. கருவுற்ற ஒரு தாய், ஒரு குழந்தை உட்பட ஐந்து கிறிஸ்தவர்கள் ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் ஏற்பட்ட ஒரு நிலக்கண்ணி வெடி விபத்தில் கொல்லப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை இரவு Bamumigam என்ற கிராமத்தில் நடந்த இந்த வெடி விபத்திற்கு இதுவரை எந்த ஒரு குழுவும் பொறுப்பேற்கவில்லை எனினும், இது மாவோயிஸ்டுகளின் முயற்சியாக இருக்கும் என்று காவல் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்குச் சென்று, ஆம்புலன்ஸ் வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த ஐவரும் இந்த வெடிகுண்டு விபத்தில் இறந்துள்ளனர். இவர்களது உடல் பாகங்கள் 500 மீட்டர்கள் வரை தூக்கி எறியப்பட்டுள்ளதென்றும், இக்கண்ணி வெடியால் சாலையில் பத்தடி ஆழமான குழி ஏற்பட்டுள்ளதென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புத் துறைக்கும் கடந்த சில மாதங்களாக மோதல்கள் நடந்து வருகிறதென்றும், முதல் முறையாக ஓர் ஆம்புலன்ஸ் வண்டி தாக்குதலுக்குள்ளானதென்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

ஒரு பாவமும் அறியாத மக்களை வன்முறைக்கு உள்ளாக்குவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்று பழங்குடியினரிடையே பணி புரியும் அருள்தந்தை நிக்கோலஸ் பார்லா கூறினார்.

உயிர்களை உருவாக்க முடியாதவர்கள் உயிர்களை அழிப்பது எவ்வகையிலும் நியாமற்றதேன்று மனித உரிமை ஆரவலரான அருள் சகோதரி Justine Senapati கூறினார்.








All the contents on this site are copyrighted ©.