2010-11-27 15:45:01

பிலிப்பீன்ஸில் அமைதிக்காக பல்மத ஊர்வலம்.


நவ 27, 2010. இருபதாயிரம் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினர் இணைந்து தென் பிலிப்பீன்ஸ் நகரான சம்போவாங்காவில் 'மிந்தனாவோ அமைதி வாரத்தை' இரண்டு மணி நேர ஊர்வலத்துடன் துவக்கினர்.

மிந்தனாவோவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணத்தை வெளிப்படுத்தும் விதமாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அமைதி என்பது நிறைவேற்ற முடியாத ஒரு கருத்து அல்ல, மாறாக கடின உழைப்பு மற்றும் ஐக்கியத்தின் உண்மையான கனி என இந்த அமைதிக்கான ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் அறிவித்தனர்.

கிளரிசியன் துறவு சபையின் குரு ஆஞ்சல் கால்வோ தற்போது தலைவராக இருந்து வழிநடத்தும் 'அமைதிக்கான மதங்களிடையேயான ஒருமைப்பாட்டு இயக்கம்' என்பது 1998ம் ஆண்டு முதல் பிலிப்பீன்ஸின் மிந்தனாவோ பகுதியின் அமைதிக்கான பல்சமய ஊர்வலத்தை நடத்தி வருகின்றது.








All the contents on this site are copyrighted ©.