2010-11-27 15:38:54

நவம்பர் 28, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1821 - பானமா ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து கொலம்பியாவுடன் இணைந்தது.
1843 - பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன ஹவாய் அரசை விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
1893 - நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
1943 - இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க அரசுத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், இரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.
1958 - சாட், காங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
1975 - கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.1990 – பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.







All the contents on this site are copyrighted ©.