2010-11-27 15:45:23

சுற்றுச் சூழல் பிரச்னைக்கான தீர்வுக்கு இந்திய பரிந்துரைகள்.


நவ.27, 2010. மெக்ஸிகோவின் Cancun ல் இடம்பெற உள்ள ஐநாவின் சுற்றுச்சூழல் கருத்தரங்கில் இரு முக்கியப் பரிந்துரைகளை இந்தியா முன்வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழிற்சாலை வாயுக்களை தேசிய அளவில் கண்காணிப்பது மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவு தொழில் நுட்பங்களை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது ஆகிய பரிந்துரைகளைக் கடைபிடிக்கப்போவதாக இக்கருத்தரங்கில் அறிவிக்க உள்ளது இந்தியா.

சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் களைவதற்கும், உலகம் வெப்பமாகி வருவதைத் தடுப்பதற்கான தீர்வுகளைக் காண்பதற்கும் இந்தியா கடினமாக உழைத்து வருவதாக இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

மெக்ஸிகோவில் இம்மாதம் 29ந் தேதி திங்களன்று துவங்க உள்ள சுற்றுச் சூழல் குறித்த ஐநா கருத்தரங்கு டிசமபர் மாதம் 10ந்தேதி, ஐநா மனித உரிமைகள் தினமன்று நிறைவுக்கு வரும்.








All the contents on this site are copyrighted ©.