2010-11-27 15:44:43

இளைஞர்களின் நுகர்வுக் கலாச்சாரப்போக்கு குறித்து லாவோஸ் திருச்சபை கவலை.


நவ 27, 2010. லாவோஸ் நாட்டில் இளங்கத்தோலிக்கரிடையே பரவி வரும் நுகர்வுக் கலாச்சாரம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அந்நாட்டுத் தலத்திருச்சபை அறிவித்துள்ளது.

மதத்தினின்று விலகி நிற்கும் போக்கும் நுகர்வுக்கலாச்சாரமுமே இன்றைய இளைஞர்களை வெகு அளவில் பாதித்து வருவதாக உரைத்த அந்நாட்டு ஆயர் Jean Marie Prida Inthirath, இளம் கத்தோலிக்கர்களில் பலர், தேவைக்கும் விருப்பத்திற்கும் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் திருச்சபையை விட்டு விலகி, தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கவலையை வெளியிட்டார்.

கம்யூனிச லாவோஸில் இளைஞர்கள் பணமே பெரிதென எண்ணுவதால், எளிமையை அடிப்படையாகக்கொண்ட அந்நாட்டின் கலாச்சாரம் காணாமல் போய் வருவதாகவும் கூறினார் அவர்.

பெரியோர்களின் சரியான வழிகாட்டுதல் இன்மையே இளையோரின் பாதை மாறல்களுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டையும் ஆயர் Prida Inthirath முன்வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.